//எக்ஸ் வீடியோஸ் – பத்திரிகையாளர் சந்திப்பு

எக்ஸ் வீடியோஸ் – பத்திரிகையாளர் சந்திப்பு

கலர் ஷேடோஸ் எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பில் சஜோ சுந்தர் இயக்கியுள்ள படம் ‘ எக்ஸ் வீடியோஸ் ‘ .

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திபில் இயக்குநர் சஜோசுந்தர் பேசும் போது, இன்றய தொழில் நுட்ப முன்னேற்றம் நமக்கு தெரியாமல் நம்மை எந்த அளவுக்கு அபாய கட்டத்திற்கு கொண்டுசெல்கிறது மற்றும் அதனுடைய குற்ற பின்னனிகள் குறித்த சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் “எக்ஸ் வீடியோஸ்” அமைந்துள்ளது என்றார்.

மேலும் அவர் சமீபத்தில் ஆனந்த விகடனில் வெளிவந்த கட்டுரையில் அரசுப் பள்ளிகளில் போதிய கழிவறை இல்லாமல் மாணவிகள் சிறுநீர் கழிக்க முடியாமல் படும் அவதிகளை படித்து மனம்வெதும்பி . இந்தப் படத்தில் வரும் லாபம் கொண்டு அரசுப் பள்ளிகளுக்குக் கழிப்பறை கட்டப் பயன்படுத்துவேன் என்றார்.

நடிகர் அஜய்ராஜ் பேசும் போது ,சமூகக் குற்றம் பற்றி துணிச்சலாக சொல்லும் படம் ” என்றார்.

கலை இயக்குநர் கதிர் பேசும் போது, “சஜோ இந்தக் கதையை என்னிடம் கூறிய போது நன்றாக இருந்தது. ஆனால் பயமாக இருந்தது. அவருக்காக படத்தில் நான் பணியாற்றினேன். இருந்தாலும் படத்தைக் காட்டிய பின் தான் என் பெயரைப் போட வேண்டும் என்றேன். அவ்வளவு பயமுறுத்தியது கதை. ஆனால் படம் பார்த்த பின் சமாதானமானேன். நாக​ரீ​கமாகவே எடுத்திருக்கிறார். ” என்றார்.