//விஷாலின் அதிரடி கட்டளைகள்

விஷாலின் அதிரடி கட்டளைகள்

புதிதாக தமிழ் மொழிப்படங்களுக்கு 10% மற்ற மொழிப்படங்களுக்கு 20% கேளிக்கை வரியினை தமிழக அரசு சமீபத்தில் விதித்தது. இதை எதிர்த்து திரையுலகினர் நடத்திய போரட்டட்தினால் இரண்டு வாரங்களாக எந்த புதிய திரைப்படங்களும் வெளியிடபடவில்லை.

புதிய படங்கள் வெளியீடு இல்லை என்ற தயாரிப்பாளர் சங்கத்தின் முடிவை மீறி ‘மெர்சல்’ படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திது உலகெங்கும் 3292 திரையரங்குகளை அமர்தியுள்ளது. மேலும் இப்படத்திற்கு போட்டியாக மேயாத மான் திரைப்படமும் வெளியடபோவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். தீபாவளிக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் இவ்விரு திரைப்படங்கள் மட்டுமே வெளியாகும் என எதிர்பார்கப்படுகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் திரு. விஷால் அதிரடியாக சில கட்டளைகளை விதித்துள்ளார். அவை பின்வருமாறு

  1. அரசு நிர்ணயம் செய்த கட்டணம் மட்டுமே இனி திரையரங்குகளில் வசூலிக்கப்படவேண்டும்.
  2. அனைத்து உணவு பொருட்களும் அவற்றின் MRP விலைக்கே விற்கப்படவேண்டும். மேலும் ரசிகர்கள் தண்ணீர் பாட்டில்களை கொண்டுசெல்ல அனுமதிக்கப்பட வேண்டும்.
  3. அரசு விதித்துள்ள பார்கிங் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படவேண்டும்.
  4. ஆன்லைன் பதிவு சேவை கட்டணம் படிப்படியாக விரைவில் குறைக்கப்படவேண்டும்.
  5. இவற்றை மீறி செயல்படும் திரையரங்குகள் மீது அரசிடம் உடனடியாக புகார் கொடுத்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

விஷாலின் இந்த அறிவிப்புக்கு சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

திரையுலகத்தில் உள்ள முக்கிய சங்கமான தயாரிப்பாளர் சங்கமே திரையரங்களின் கொள்ளைகளுக்கு எதிராக அறிவிப்பு செய்துள்ளது பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.

இக்கட்டளைகளுக்கு திரையரங்க உரிமையாளர்கள் செவிசாய்பார்கள் என்பதை பொருத்திருந்து தான் பார்கவேண்டும்

Image Courtesy: Mr. Diamond babu, PRO