“வெள்ள ராஜா” -அமேஸான் பிரைம் வீடியோ அதன் முதல் தமிழ் பிரைம் பிரத்தியேகத் தொடர்

அமேஸான் பிரைம் வீடியோ அதன் முதல் தமிழ் பிரைம் பிரத்தியேகத் தொடர் – “வெள்ள ராஜா” அறிமுகத்தினை அறிவித்துள்ளது

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு, பாபி சிம்ஹா – பார்வதி நாயர் நடிக்கும் இத்தொடர், டிசம்பர் 7 அன்று, அமேஸான் பிரைம்வீடியோவில் பிரத்தியேகமாக அறிமுகம் செய்யப்படவுள்ளது ~

பிரைம் உறுப்பினர்களுக்கான தனது முதல் பிரைம் பிரத்தியேகத் தொடராக, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் உடனான கூட்டாண்மையில்உருவாக்கப்பட்டுள்ள வெள்ள ராஜா- ன் அறிமுகத்தினை அமேஸான் பிரைம் வீடியோ டிசம்பர்1, 2018 அன்று அறிவித்தது. டிசம்பர் 7, 2018 அன்று 200 நாடுகள் மற்றும்பிராந்தியங்களில் ஒளிபரப்பபடவுள்ள வெள்ளை ராஜா பிரைம் உறுப்பினர்களுக்காக, தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டும் கிடைக்கப்பெறும்.

வெள்ளை ராஜா குறித்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ், S.R.பிரபு அவர்கள், “தமிழில், பிரம்மாண்டமான முறையில், ஒரு தைரியமான கதையை சொல்வதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியும்மற்றும் ஆர்வமும் கொண்டுள்ளோம். எங்களது அனைத்து பணிகளிலும், தரமான பொழுதுபோக்கினை வழங்க நாங்கள் அயராது முயற்சிக்கிறோம். வழக்கம்போல், ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நாங்கள் ஆழமாக உருவாக்கியுள்ளோம் மற்றும் ஒரு சிக்கல், மர்மம் நிறைந்த போதை மருந்து உலகம் குறித்து, சிற்சில புன்னகை நேர்வுகளுடன் இந்த பிரைம் பிரத்தியேக தொடரை வடிவமைத்துள்ளோம். ஆர்வமூட்டும் கதை, நம்பத்தக்க இயக்குனர்கள்,தயாரிப்பாளர்கள் மற்றும் உறுதியான நட்சத்திர பட்டாளத்தைக் கொண்டுள்ள இது, பிரைம் வீடியோ நேயர்களால் பெரிதும் விரும்பப்படும் என்றுநம்புகிறோம். மேலும் இந்த உள்ளுர் கதையை இந்தியாவிலுள்ள நேயர்களுக்கு ஏற்றவாறு மட்டுமின்றி, அமேஸான் பிரைம் வீடியோவில் இணைந்துள்ளஅனைத்து சர்வதேச நேயர்ளுக்கும் ஏற்றவாறு வடிவமைத்துள்ளோம்” என்று கூறினார்.

வடசென்னையின் மையத்தில் அமைந்துள்ளதொரு பிரபலமான லாட்ஜ், பாவா லாட்ஜாகும். இந்த லாட்ஜில் தங்கி, பணையக் கைதி சூழலில் இருக்கும்நபர்களைச் சுற்றி இக்கதை அமைக்கப்பட்டுள்ளது. பிரலமானதொரு போதை மருந்து கடத்தல் கும்பலின் தலைவனான தேவா ஒரு கொக்கைன் (Cocaine)சோதனையைத் தொடர்ந்து அங்கு ஒளிந்திருக்கிறான். அவன் காவல்துறையின் மற்றும் தனது எதிரிகளின் தடைகளை மீறி தனது பொருட்களுடன் தப்பிக்கவேண்டும். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸால் தயாரிக்கப்பட்டு, குகன் சென்னியப்பன் அவர்களால் இயக்கப்பட்டுள்ள இத்தொடரில், பாபி சிம்ஹா மற்றும் பார்வதிநாயர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வெளிவரவுள்ள வெள்ள ராஜா பிரைம் ஒரிஜினல் தொடர், மற்றும் புதிதாக வெளியாகும் ஹாலிவுட் மற்றும் பாலிவுட் திரைப்படங்கள், சமீபத்திய யுஎஸ்தொலைகாட்சி நிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் மற்றும் பிற அமேஸான் பிரைம் ஒரிஜினல்களை பார்வையிட  அமேஸான் பிரைம் வீடியோ ஆப்பை இன்றே டவுன்லோடு செய்யவும் மற்றும் பிரைம் மெம்பர்ஷிப்பில் ஆண்டிற்கு ரூ.999 அல்லது பிரதி மாதம் ரூ.129 கட்டணத்தில் இணையவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *