//திரு​. வாக்காளர் – பட பூஜை

திரு​. வாக்காளர் – பட பூஜை

1986 law Batch Media Productions தயாரிக்கும் முதல் படமான ​’​​​திரு​. வாக்காளர்​’​ பட பூஜை  சிறப்பாக நடைபெற்றது. இப்படத்தின் இயக்குநர் தி.இரமேஷ் பிரபாகரன். இவர் வாசு, மகேந்திரன் ஆர்.வி.உதயகுமார் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். இவர் ஏற்கனவே கன்னடத்தில் கள்மஞ்சா என்ற வெற்றி படத்தை இயக்கி உள்ளார்.​ இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் அபி சரவணன் நடிக்கிறார். மேலும் 3 புதுமுகங்கள் நடிக்க உள்ளனர்.​

படத்தை பற்றி இயக்குனர் கூறுகையில் -சட்டத்தாலும் சத்தத்தாலும் மட்டுமே வருவதல்ல மாற்றம் அது வாக்கு வாங்கும் அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும். வாக்களிக்கும் வாக்காளர்களுக்கும் பொருந்தும் ஒவ்வொரு வாக்காளரும் திரு. வாக்காளர் ஆகவேண்டும் என்பதற்கான முயற்சியே இப்படம் என கூறினார். இவர் ஒரு வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.