//மீண்டும் திரையரங்குகளில் தரமணி

மீண்டும் திரையரங்குகளில் தரமணி

ராம் இயக்கத்தில் வசந்த் ரவி, ஆண்ட்ரியா நடித்து சமீபத்தில் வெளியான படம் `தரமணி’. மிகத் தாமதமாக வெளியானாலும் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது.

தமிழ் திரைப்படச் சூழல் என்பது, பெண் மையக் கதைகள் அரிதாக வரும் தளம். அதிலும் பெண்களின் பிரச்னைகளைத் தைரியமாகப் பேசும் திரைப்படங்கள் விரல்விட்டு எண்ணக்கூடக் கிடைக்காதவை. ‘தரமணி’… பெண்ணைச் சூழ்ந்துள்ள கண்ணாடிக் கூரைகளை உடைத்துப் பேசுகிறது.

படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் விமர்சனங்களால் மூன்று வாரங்களுக்கும் அதிகமாக ஓடிய படம், புதிய படங்களின் வருகை காரணமாக காட்சிகள் நிறுத்தப்பட்டது. தற்போது வரி விதிப்புக்கு எதிராக தொடரப்பட்ட வேலை நிறுத்தத்தால் புதிய படங்கள் வெளியாவது நிறுத்தப்பட்டிருந்தது.

இந்த சந்தர்பத்தைப் பயன்படுத்தும் விதமாக ‘தரமணி’ மீண்டும் திரையரங்கில் திரையிடப்பட இருக்கிறது. படத்தின் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் இது குறித்து படத்தின் மறுவெளியீட்டு போஸ்டருடன் ட்விட்டரில் படம் மீண்டும் வெளியாகும் என்ற தகவலை பதிவு செய்திருந்தார்.