//தமிழ் சினிமா கிரிட்டிக் கவுன்சில் துவக்கம் – தமிழ் திரையுலகில் புதிய அத்தியாயம்:

தமிழ் சினிமா கிரிட்டிக் கவுன்சில் துவக்கம் – தமிழ் திரையுலகில் புதிய அத்தியாயம்:

தமிழ் சினிமா கிரிட்டிக் கவுன்சில் (தமிழ் திரைப்பட விமர்சகர்கள் சபை) என்ற புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 29-10-2017 அன்று சென்னையில் தி.நகர் சோசியல் கிளப்பில் நடந்த நிகழ்வில் இது தொடங்கப்பட்டது.

இதன் தலைவராக திரு.ராம்ஜி (மக்கள் குரல்), செயலாளராக கே.எம்.மீரான் (தமிழ் முரசு), பொருளாளராக திருமதி.அனுபமா (டெக்கான் க்ரோனிக்கல்), துணைத் தலைவராக திரு.பிஸ்மி (தமிழ்ஸ்கிரீன்.காம்), துணைச் செயலாளராக திரு.ஷங்கர் (ஒன்இண்டியா.காம்) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

திரு.ஜியா உல் ஹக் (தினகரன்), திரு.சுகந்த் (டைம்ஸ் ஆஃப் இண்டியா), திரு.ஜெயந்தன் (தமிழ் இந்து), திரு.ராம்குமார் (மாலை முரசு), திரு.மா.கா.செந்தில்குமார் (ஆனந்த விகடன்), திரு.அந்தணன் (நியூதமிழ்சினிமா.காம்) ஆகியோர் செயற்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

வெளியாகும் திரைப்படங்களின் நிறைகளை பாராட்டியும், குறைகளை கண்ணியமாக சுட்டிக் காட்டியும் விமர்சனங்களை பதிவு செய்வது, ஆண்டு தோறும் சிறந்த திரைப்பட கலைஞர்களை கவுன்சில் உறுப்பினர்கள் வழங்கும் வாக்கின் அடிப்படையில் தேர்வு செய்து கவுரவிப்பது, வணிக நோக்கம் இன்றி விருது விழாவை நடத்துவது ஆகியவை கவுன்சிலின் முக்கிய நோக்கமாகும். திரைப்படத்துறையில் அவ்வப்போது சாதனை படைக்கிறவர்களையும் கவுன்சில் கவுரவிக்கும். திரைப்படத்துறையின் வளர்ச்சிக்கு தேவையான பங்களிப்பையும் கவுன்சில் வழங்கும்