//தத்தளிக்கும் திரையரங்குகளும் புதிய வரிவிதிப்புகளும்..

தத்தளிக்கும் திரையரங்குகளும் புதிய வரிவிதிப்புகளும்..

தமிழ் திரையரங்க உரிமையாளர்கள் சங்கமும் திரைப்பட வினோகிஸ்தர்கள் சங்கமும் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வேண்டுகோளினை ஏற்று தமிழக அரசு புதியாய் விதித்துள்ள 10% கூடுதல் கேளிக்கை வரியினை ரத்து செய்யுமாறு மேற்கொண்டிருக்கும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கடந்த வெள்ளிகிழமையன்று எந்த ஒரு புதிய திரைப்படத்தையும் ரிலீஸ் செய்யவில்லை.

சினிமா டிக்கெட்டிற்கு, சரக்கு மற்றும் சேவை வரியான, ஜி.எஸ்.டி., 28 சதவீதம், கேளிக்கை வரி, 10 சதவீதம் என, இரட்டை வரி விதிக்கப் பட்டது. இதனால், பாதிக்கபட்ட தியேட்டர் உரிமையாளர்கள், ‘இரட்டை வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும். டிக்கெட் விலையை உயர்த்த, அனுமதிக்க வேண்டும்’ என, அரசை வலியுறுத்தினர்.

இந்நிலையில் சினிமா டிக்கெட் கட்டணத்தை, 25 சதவீதம் உயர்த்த,தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. ஜி.எஸ்.டி., மற்றும், கேளிக்கை வரி என, இரட்டை வரி விதிக்கப் பட்டதற்கு, எதிர்ப்பு கிளம்பியதால், டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி, தியேட்டர் உரிமையாளர்களுக்கு, அரசு சலுகை வழங்கி உள்ளது. இதனால், தியேட்டர்களில், அதிகபட்ச டிக்கெட் விலை, 220 ரூபாயாகிறது.

இன்னும் 8 நாட்களில் தீபாவளி பண்டிகை வருவதையொட்டி வெளியாக தயார் நிலையிலுள்ள முன்னனி நடிகர்களின் திரைப்படங்களும் இதனால் கலக்கமடைந்துள்ளன்ர்.

மதுரை, செங்கல்பட்டு, கோயம்பத்துர் ஊர்களில் உள்ள திரையரங்க உரிமையாளர்கள் ” ஒரு நாடு- ஒரே வரி” என்னும் கோட்பாடிர்கு உட்பட்டால் திரையரங்குகளை தொடர்ந்து நடத்துவதென்றும் இல்லையேல் இழுத்து மூடும் முடிவினை தெரிவித்துள்ளனர்.

10 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் 2,245 திரையரங்குகள் இருந்தன. தற்போது 1,045 திரையரங்குகள் மட்டுமே உள்ளன. கிட்டத்தட்ட 60 சதவீத திரையரங்குகளை மூடிவிட்டார்கள். இத்தகைய புதிய வரிகளினால் மேலும் பல திரையரங்குகள் மூடும் அபாயம் ஏற்ப்பட்டுள்ளது.

தற்போதய நிலரவப்படி மல்டி ப்ளக்ஸ் திரையரங்குகளுக்கு கேளிக்கை வரியோடு சேர்த்து ரூ.150 கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. அதோடு ஜிஎஸ்டி வரி சேர்த்து ரூ.192க்கு டிக்கெட்களை விற்கவேண்டும். ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும்போது, இந்த கட்டணம் ரூ.227 ஆக உயர்ந்துவிடும்.

வெளி மாநிலம் மற்றும் ஹாலிவுட் படங்களுக்கு 20 சதவீத கேளிக்கை வரி விதித்ததால் இனி அவர்கள் தங்களது படங்களை இங்கு வெளியிடப் போவதில்லை என்று முடிவெடுத்துள்ளனர்.

இதுகுறித்து தென்னிந்தியாவின் முதல் திரையரங்கை நிறுவிய திரு. சாமிகண்ணு வின்சண்ட் அவர்களின் பிறந்த நாளினை திரையரங்குதினமாக கொண்டாடிய தயாரிப்பாளார் G.K.திருநாவுக்கரசு அவர்கள் கூறுகையில்

இந்த புதிய கட்டணங்கள் அமலுக்கு வரும்பொழுது இவை சரியாக பின்பற்றப்படுகின்றதா என அரசு கண்காணிக்குமா? என்று கேள்வியெழுப்பினார்.

மேலும் அவர் பேசுகையில் நமது அண்டை மாநிலமான தெலுங்கானா இங்கு டாஸ்மாக் கடைகளை அரசு ஏற்று நடத்துவதுபோல் திரையரங்க டிக்கட் பதிவுகளை அரசு இணையதளம்மூலம் மட்டுமே விற்க்குமாறு வழிசெய்துள்ளது. மேலும் இது வெளிப்படைத்தன்மைக்கு உதவுகிறது. ஜி.எஸ்.டி ஆட்சியின் படி டிக்கெட் விற்பனை மற்றும் வரி வசூல் செய்வதற்கான துல்லியமான தகவல்களை அது வழங்குகிறது. இதை ஏன் தமிழகஅரசும் செயல்படுத்தக்கூடாது?

சீனாவில் சில ஆயிரங்களாக இருந்த திரையரங்குள் இப்போது பல ஆயிரங்களாக பெருகியுள்ளது. ஆனால் தமிழகத்திலோ தலைகீழ். ஆயிரங்கள் நூறுகளாக குறிகியுள்ளது.

தொழில்நுட்ப முன்னேற்றத்தில் இன்று திருட்டுவிசிடிகளின் தறம் மிகுந்துள்ள நிலையில் மக்கள் திரையரங்குகளுக்கு வருவது மிகவும் கேள்விக்குரியே.

தென்னிந்தியாவின் முதல் திரையரங்கம் நிறுவப்பட்டது தமிழகத்தில் தான். இப்போது திரையரங்களுக்கு மூடுவிழா நடத்தப்படுவதும் தமிழகத்தில்தான் என்பது வருந்ததக்கதாகும் என்றார்.

ஆயுத எழுத்து Exclusive.  தொடர்புக்கு aayudhaezhuthu1@gmail.com