இந்திய ஒற்றுமைக்கான அடையாளம்

500 க்கும் மேற்பட்ட மன்னராட்சி சமஸ்தானங்களை ஒன்றிணைத்து ஒன்றுபட்ட இந்தியாவாக உருவாக்கியவர் இரும்பு மனிதர் என போற்றப்படுபவர்  சர்தார் வல்லபாய் படேல்.

அவரின் 143ஆவது பிறந்த நாளை கெளரவிக்கும் வகையில் குஜராத் மாநிலம் நர்மதா அருகே சர்தார் சரோவர் அணைபகுதியில் 182 மீட்டர் உயரத்தில் உருவாக்கப்பட்ட அவருடைய சிலையை பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் இந்தியாவின் ஒற்றுமையின் அடையாளமாக அறிவித்து நாட்டுக்கு அற்பணித்தார்.

இச்சிலை அமெரிக்காவின் சுதந்திர தேவி ( Statue of Liberty) சிலையினை விட இருமடங்கு உயரமானதாகும். 
153 மீட்டர் உயரம் கொண்ட சீனாவின் டெம்புள் புத்தர் சிலையே இதுவரை உலகின் உயரமான சிலையாக இதுவரை இருந்துவந்தது. இப்பொழுது அப்பெருமை சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு கிடைத்துள்ளது.

இந்த பிரமாண்ட சிலை பூமியில் இருந்து முழங்கால் வரையில் முதல் பகுதி , இதிலிருந்து தொடைவரை இரண்டாவது பகுதி, பார்வையாளார் பகுதி மூன்றாவது பகுதி, பராமரிப்பு பகுதி நான்காவது சிலையின் தோள் மற்றும் தலை ஐந்தாவது என ஐந்து பகுதிகளாக வடிவமைக்கப்பட்டுளது.

இச்சிலையின் கட்டுமானத்துக்கு 70,000 டன் சிமெண்ட், 18,500 டன் இரும்பு கம்பிகள், 6.500 டன் இரும்பு கட்டுமான பொருட்கள், 1700 டன் வெண்கலம் ஆகியவற்றை கொண்டு ரூபாய் மூவாயிரம் கோடி செலவில் 2015 ஆம் ஆண்டு டிசம்பரில் தொடங்கி 33 மாதங்களில் உலகின் பல்வேறு பெருமைவாய்ந்த தொழில்னுட்ப வல்லுனர்களால் உருவாக்கப்பட்டு உலகில் மிக குறுகிய காலத்தில் கட்டி முடிக்கப்பட்ட சிலை என்ற பெருமையினையும் பெற்றுத்தந்துள்ளது.

சுமார் 67.000 மெட்ரிக் டன் எடையுளள இச்சிலை புயல் காற்று மற்றும் நிலநடுக்கம் ஏற்பட்டாலும் பாதுகாப்பாக இருப்பதற்கான தொழில்நுட்பங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதுள்ள தொழில்நுட்ப வல்லுநர்கள் திட்ட மேலாண்மைக்கான ஆய்வுக்கும் , திட்டமிடுதல், வடிவமைப்பு போன்றவற்றுக்கான ஆய்வுக்கும் இச்சிலை ஒரு சான்றாகும்

இச்சிலையின காண தினம்தோறும் 15,000 கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருவார்கள் எனவும் அவர்களால் அப்பகுதி பொருளாதார மேம்பாடடையும் என்றும் மக்களின் வாழவாதாரம் உயரும் என்றும் எதிர்பார்கப்படுகிறது. அவர்களை கவரும் வகையில் காணொளி காட்சிகளும் எற்பாடு செய்யப்பட்டுளது.

இந்திய ஒற்றுமைக்கான அடையாளம்
Statue of Unity

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *