//சோலோ – ரீ ரிலீஸ்

சோலோ – ரீ ரிலீஸ்

சினிமா தயாரிப்பு தொழிலில் கால் பதித்திருக்கும் ‘ரெஃபெக்ஸ் குரூப்’, தனது ‘ரெஃபெக்ஸ் எண்டர்டெயின்மண்ட்’ நிறுவனம் மூலமாக அனில் ஜெயின், கெட் அவே ஃபிலிம்ஸ் உடன் இணைந்து தயாரித்திது  அக்டோபர் 5 அன்று வெளிவந்த படம் ‘சோலோ’. துல்கர் சல்மான் நடிக்கும் இந்த படத்தை பிஜாய் நம்பியார் இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் நிலம், நீர், காற்று மற்றும் நெருப்பு என நான்கு முக்கிய ஆதாரங்களை சுற்றி நான்கு வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் துல்கர்

இந்த படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்கள் தனித்துவம் மிக்கவை. துல்கரின் ருத்ரா கேரக்டரை அடுத்த கட்டத்துக்கு தூக்கி செல்ல 11 இசையமைப்பாளர்களோடு இணைந்து பணியாற்றி இருக்கிறார் இயக்குனர் பிஜாய் நம்பியார்.

சில தவிர்க்க முடியாத காரணங்களால் அடுத்த நாளிலிருந்தே திரையிட முடியாத நிலை ஏற்பட்டது.அந்த ஒரு நாளில் ‘சோலோ’ படத்தை பார்த்த சினிமா ரசிகர்களும் விமர்சகர்களும் படத்தின் எல்லா அம்சங்களையும் ரசித்து மகிழ்ந்தனர். இந்த செய்தி மக்களிடையே பரவி இப்படத்தை காணும் ஆர்வம் அதிகரித்தது. இந்நிலையில் இன்று முதல் ‘சோலோ’ படம் தமிழ்நாடு முழுவதும் எண்பதிற்கும் மேற்பட்ட திரைகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த செய்தி தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தை காண காத்திருக்கும் பெரும் கூட்டத்திற்கு இது ஒரு சரியான வாய்ப்பாக அமைந்துள்ளது.

பிரதி வெள்ளிக்கிழமையன்றும் பல படங்கள் திரைக்கு வந்துக் கொண்டே தான் இருக்கிறது. வெகு சில படங்களே மக்களின் ஆதரவை பெற்று அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ரீ ரிலீஸ் செய்யப்படும்.