//மேதினத்தன்று தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் தொடக்கம் | SIFWA|

மேதினத்தன்று தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் தொடக்கம் | SIFWA|

தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் -இதன் தலைவராக வைசாலி சுப்பிரமணியன் , செயலாளராக ஈஸ்வரி V.P , துணை செயலாளராக மீனா மருதரசி .S , பொருளாளராக கீதா .M , துணை தலைவர் ஏஞ்சல் சாம்ராஜ் ஆகிய ஐவரை செயற்குழுவாக கொண்டு மேதினத்தன்று தொடக்கப்படவுள்ளது.

sifwa team 1

இதற்கான பணிகள் கடந்த ஆறு மாத காலங்களாக நடைபெற்று வந்தாலும் இதை அதிகாரப்பூர்வமாக மேதினத்தன்று ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளனர்.

தொடக்க விழாவிற்கு P.C.ஸ்ரீராம் , வெற்றிமாறன் , சத்யராஜ் , ரோகினி , ரேவதி , சச்சு அம்மா , புஷ்கர் காயத்ரி மற்றும் ஆடை வடிவமைப்பாளர்கள் , ஒளிப்பதிவாளர்கள் , கீதா குருவப்பன் (sound engineer) ஆகியோர் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

மேலும் விழாவில் தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் சார்பாக ஒரு காலாண்டு மாத இதழ் வெளியிடவிருக்கின்றனர்.

இந்த தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையத்திற்கு நிறைய பெண்கள் வரவேண்டும் .100 வருட தமிழ் திரைப்பட வரலாற்றில் இது ஒரு வரலாறாக இருக்கும் , அடுத்த தலைமுறைகள் இதில் வரவேண்டும் என்பதற்காக போடப்பட்ட அடித்தளம் இது – என்பதே இக்குழுவினருடைய எதிர்பார்பாகும்.

sifwa-invite