//ஆங்கில படங்களுக்கு இணையான தமிழ்படம் – அவள்

ஆங்கில படங்களுக்கு இணையான தமிழ்படம் – அவள்

சித்தார்த் மற்றும் ஆண்ட்ரியாவின் நடிப்பில், இயக்குனர் மணி ரத்னத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மிலிண்ட் ராவ் இயக்கத்தில், ‘Etaki Entertainment’ நிறுவனமும் ‘Viacom 18 Motion Pictures’ நிறுவனமும் இணைந்து இந்த உறையவைக்கும் ஒரு பேய் படத்தை “அவள்” என்ற தலைப்பில் தயாரித்துள்ளனர்.

தனக்கு கொடுக்க பட்ட எந்த ஒரு கதாபாத்திரத்திற்குள்ளும் மிக எளிதாகவும் அழகாகவும் நுழைந்து அசத்துபவர் நடிகர் சித்தார்த். ஒரே மாதிரியான படங்களில் என்றுமே நடிக்காத ஒரு அரிய நடிகர் அவர். அவரது நடிப்பில் உருவாகும் அடுத்த படமான ‘அவள்’ ஒரு பேய் படமாகும்.

சுவாரஸ்யமாக எடுக்கப்பட்ட , உண்மையான அச்ச உணர்வை தூண்டும் பேய் படங்கள் தமிழ் சினிமாவில் பெரும்பாலும் வெற்றி பெற்றுள்ளது.

கடந்த சில ஆண்டு காலமாக உண்மையான பேய் படங்களை விட பேய் காமெடி படங்களே தமிழ் சினிமாவில் வெளி வர ஆரம்பித்து,மக்களிடத்தில் பேய் படம் பார்க்கும் போது வரும் அச்ச உணர்வை தகர்த்து விட்டது என்று கூறலாம்.இது பேய் படம் ரசிக்கும் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை அளித்து வந்தது.

ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து நாலரை வருடங்களாக நானும், சித்தார்த்தும் இணைந்து இந்த படத்தின் திரைக்கதையை எழுதியிருக்கிறோம். இந்த படத்தின் டிரைலரை பார்த்தால் தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்றார் இயக்குனர் மிலிந்த்.

எனக்கு மட்டும் எப்படி நல்ல, வித்தியாசமான படங்கள் அமைகிறது என்று எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது. என் கேரியரில் தரமணியை தொடர்ந்து அவள் படமும் ஒரு சிறந்த படமாக இருக்கும். இந்த படம் ரொம்பவே பயமுறுத்தும். அதனால் நிச்சயமாக இந்த படத்தை நான் பார்க்க மாட்டேன் என்றார் நாயகி ஆண்ட்ரியா ஜெர்மியா.

சில தினங்களுக்கு முன் வெளியான டீஸரின் மாபெரும் வெற்றியினை தொடர்ந்து சிறந்த ஒளிப்பதிவு, பயம் உண்டாக்கும் இசையமைப்பு, படமாக்கியுள்ள விதம், சொல்லப்படவுள்ள கதை, நடிகர்களின் அபாரமான நடிப்பு ஆகியவை இந்த டீசருக்கு இவ்வளவு பெரிய வெற்றியை தந்துள்ளது. உண்மையான பேய் பட ரசிகர்களுக்கு ‘அவள்’ திரைப்படம் ஆங்கில படங்களுக்கு இணையாக இருக்கும் ஒரு திகில் படம் என எதிர்பார்கப்படுகிறது.

இத்திரைப்படம்  நவம்பர் 3ஆம் தேதி வெளிவரவிருக்கிறது.

அவள்

Flickr Album Gallery Powered By: Weblizar