//சண்டகோழி-2

சண்டகோழி-2

விஷால் நடிப்பில் இயக்கு​​நர் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் சண்டகோழி… இன்று இத்திரைப்படத்தை எங்கு திரையிட்டாலும் தியேட்டரில் கூட்டம் கலைகட்டும். சின்னதிரையில் டி.ஆர்.பி ரேடிங் உயரும். இத்தகைய சாதனைகளை நிகழ்த்திக்காட்டிய சண்டகோழி திரைப்படத்தின் 2ஆம் பாகத்தின் படபிடிப்பு இன்று பாடல்காட்சியுடன் படபிடிப்பு ஆரம்பமானது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வெற்றி கூட்டணி, விஷால் – இயக்குநர் லிங்குசாமி இணையும் இப்படத்துக்காக சென்னை பின்னி மில்லில் மிகப்பெரிய அளவில் மதுரை திருவிழா செட் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது…தமிழ் தெலுங்கு இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தில்,விஷால், கீர்த்திசுரேஷ் இன்று பங்குபெற்றனர், இப்படத்துக்கு இசை யுவன் ஷங்கர் ராஜா , ஒளிப்பதிவு சக்தி , தயாரிப்பு விஷால் பிலிம் பேக்டரி , தயாரிப்பாளர் விஷால்.