மீண்டும் ஜாவா மோட்டார் சைக்கிள்..

1929-ம் ஆண்டில் செக்கோஸ்லேவியாவில் ஜானெசெக் என்பவர் வான்டரர் நிறுவனத்தின் டூ வீலர் பிரிவை விலைக்கு வாங்கி பைக்குகளை தயாரித்தார். அவர் பெயர், மற்றும் வான்டரர் நிறுவனத்தின் முதல் எழுத்துக்கள்தான் ‘ஜாவா’. இந்தியாவில் மைசூரைத் தலைமையகமாகக் கொண்ட ஐடியல் ஜாவா என்ற நிறுவனம், 1960ல் இந்த நிறுவனத்தின் உரிமம் பெற்று ஜாவா பைக்குகளை விற்கத் துவங்கியது.

100சிசி-க்கும் அதிகமான 2 ஸ்ட்ரோக் பைக்குகள் வெளிப்படுத்தும் புகை அளவுகளில் எழுந்த பிரச்னையின் காரணமாக, 1996-ம் ஆண்டில் (Yezdi 175, 250 Monarch, Deluxe Road King, CL II 350) மற்றும் `யமஹா RX-100 பைக்குகளின் உற்பத்தி முடிவுக்கு வந்தது.

இப்போது மீண்டும் ஜாவா மோட்டார் சைக்கிள் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த மோட்டார் சைக்கிளை மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் தயாரிக்கிறது.

புதிய ஜாவா மோட்டார் சைக்கிள் 293 சிசி திறன் இன்ஜினுடன் இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது. 27 பிஎச்பி திறனுடன், பியூயல் இன்ஜக்‌ஷன் தொழில்நுட்பம் கையாளப்பட்டுள்ளது.

புதிய மோட்டார் சைக்கிள் 293 சிசி இன்ஜினுடன் 6 கியர்கள் கொண்டதாகவும் உள்ளது. இன்று (நவம்பர் 15) ஜாவா மோட்டார் சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டது.

ஜாவா மற்றும் ஜாவா 42 என இரண்டு பைக்குகள் அறிமுகம் செய்யப்பட்டன. இவை மொத்தம் 9 நிறங்களில் தயாரிக்கப்பட்டுள்ளது.

‘1964ல இந்த பைக் விலை வெறும் 4 ஆயிரம் ரூபாய். இப்பொழுது ஜாவா பைக்கின் விலை 1.64 லட்சம் ரூபாயாகவும், ஜாவா 42 பைக்கின் விலை ரூ. 1.55 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச விலை ரூ. 1.89 லட்சமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும், டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை அடிப்படையில் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இடங்களுக்கு தகுந்தவாறு விலையில் மாற்றம் இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *