//ஒரு பக்க கதை – சிங்கிள் ட்ராக் வெளியீடு

ஒரு பக்க கதை – சிங்கிள் ட்ராக் வெளியீடு

’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ பட இயக்குநர் பாலாஜி தரணிதரன் இரண்டாவதாக இயக்கியுள்ள திரைப்படம் ’ஒரு பக்க கதை’. நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம் நாயகனாக அறிமுகம். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக மேகா நடித்துள்ளார். இவர் கெளதம் மேனன் இயக்கத்தில் ’எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் தனுஷுடன் நடித்த மேகா இப்படத்தில் நாயகி.

இந்த பட்த்தில் பாலுணர்வு சொற்கள் சில பயன்படுத்தப்பட்டதால் சென்சார் போர்டில் நீண்ட நாட்களாய் தவித்து அதிர்ஷ்டவசமாக, மறுசீரமைப்பு குழு இப்போது வார்த்தை பயன்படுத்த அனுமதி மற்றும் படம் ஒரு U சான்றிதழை வழங்கப்பட்டது .

இந்தப் படம் ரிலீஸுக்கு ரெடியாகி பல மாதங்கள் ஆன நிலையில் தற்போது இதன் சிங்கிள் ட்ராக்கை வெளியிட்டுள்ளனர்.கோவிந்த் மேனன் இசையில் கார்த்திக் நேதா பாடல் வரிகள் எழுத ஷான் ரோல்டன் மற்றும் ஆனந்தி பாடியிருக்கும் ’தானாய்’ பாடலை தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.