//நமீதா வீரேந்திர சவுத்ரி திருமணம்

நமீதா வீரேந்திர சவுத்ரி திருமணம்

ஹாய் மச்சான்ஸ் என்று தமிழ் ரசிகரகளின் மனதில் நீங்கா இடம் பெற்ற நடிகை நமீதா, குஜராத் மாநிலம், சூரத்தை சேர்ந்தவர். 2001-ம் ஆண்டு நடந்த மிஸ் இந்தியா அழகிப்போட்டியில் பங்கேற்று 2-ம் இடம் பெற்றார். 3-வது இடம் பெற்றவர் நடிகை த்ரிஷா.

2002ம் ஆண்டு முதன்முதலில் ‘சொந்தம்’ எனும் தெலுங்கு படத்தில் நடித்தார்.

2004-ம் ஆண்டில் ‘எங்கள் அண்ணா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து ‘ஏய்’, ‘சாணக்யா’, ‘பம்பரக் கண்ணாலே’, ‘இங்கிலீஷ்காரன்’, ‘கோவை பிரதர்ஸ்’, பில்லா (அஜித்), ‘அழகிய தமிழ் மகன்’ உட்பட பல படங்களில் இவர் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு மட்டுமின்றி ‘மாயா’ என்ற ஆங்கிலப்பம் என ஐந்துமொழிகளில் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், தயாரிப்பாளரும், நடிகருமான வீரேந்திர சவுத்ரியுடன் ஏற்பட்ட நட்பு, காதலாக மாறியது. இதனைத் தொடர்ந்து இரு வீட்டார் சம்மதத்துடன் இவர்களது திருமணம் நவம்பர் 24-ம் தேதி தயாரிப்பாளர் மற்றும் நடிகர் வீராவை திருமணம் செய்யவுள்ளதாக
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நமீதாவுடன் கலந்துகொண்ட ரைசா இத்தகவலை தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

Namveer03

இத்திருமணம் குறித்து நமீதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

அனைவருக்கும் வணக்கம், நானும் வீராவும் வரும் நவம்பர் 24-ம் தேதி திருப்பதி கோயிலில் திருமணம் செய்து கொள்ளவிருக்கும் செய்தி உங்களை இந்நேரம் வந்தடைந்திருக்கும். வீரா என்னுடைய சிறந்த நண்பர், என் மனதுக்கு இனியவர். அவர் தயாரிப்பாளர் என்பதுடன் ஆர்வமிக்க நடிகர். இந்தத் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்ட காதல் திருமணம்.

எங்கள் சிறந்த நண்பர் சஷிதர் பாபு மூலம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இருவருக்கும் அறிமுகம் ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் நல்ல நண்பர்களானோம். செப்டம்பர் 6, 2017-ல் கடற்கரையில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் எங்களுக்கு இரவு உணவு விருந்து அளிக்கும் போது காதலை வெளிப்படுத்தினார். நான் மெய்சிலிர்த்துப் போனேன். ஏனென்றால் நான் இதை எதிர்பார்க்கவேயில்லை. ஆனால், இருவரும் ஒரே வாழ்க்கை லட்சியத்தைப் பகிர்ந்து கொள்கிறோம், இருவரும் ஆன்மிக விழிப்பு பெற்றவர்கள் ஆகிய காரணத்தினால் நான் அவரது இந்த விருப்பத்துக்கு சம்மதம் தெரிவித்தேன். பயணம், மலையேறுதல், இயற்கையை ரசித்தல் என்று இருவருமே அன்பைப் பகிர்ந்து கொண்டோம்.

இருவருக்குமே விலங்குகளை நேசிப்பவர்கள், இருவருக்குமே வாழ்க்கை மீது பெரிய நேசமும் பற்றுதலும் இருக்கிறது. என்னை ஒருவர் அவரது வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுத்தது குறித்து நான் ஆசிர்வதிக்கப்பட்டவளாக என்னை உணர்ந்தேன். இருவருக்குமிடையே ஒளிவு மறைவு கிடையாது. கடந்த 3 மாதங்களாக நான் அவரை நிரம்பவும் புரிந்து கொண்ட பிறகு அவருடன் சேர்ந்து வாழ்வதை இன்னும் கூடுதல் அதிர்ஷ்டமாக உணர்ந்தேன். அவரது மென்மையான அக்கறை மற்றும் ஆதரவினால் ஆண்கள் மீதான என் நம்பிக்கை மீட்டெடுக்கப்பட்டது. எனக்கு ஆதரவளித்த உங்கள் ஒவ்வொருவருக்கும் என் நன்றிகள், உங்கள் நேசத்தையும் ஆசீர்வாதத்தையும் இருவருமே நாடுகிறோம். நன்றி, கடவுள் உங்களைக் காப்பார்.”

இவ்வாறு நமீதா தெரிவித்திருக்கிறார்.

Namveer01

Namveer02

திருமண விழாவிற்கு முன் சம்பிரதாயப்படி மருதாணி வைத்துக்கொள்ளும் மெஹந்தி விழாவும் அதனைத் தொடர்ந்து நிச்சயதார்த்தமும் நடந்தது.

Namveer06

Namveer07

நமீதா – வீரா திருமணம் நவ.24 அன்று திருப்பதியில் உள்ள இஸ்கான் ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலில் நடைபெற்றது.

Namveer08

Namveer09

Namveer10

Namveer13

Namveer14

Namveer15

Namveer17

Namveer18

Namveer19

தமிழ், தெலுங்கு, கன்னட திரையுலகைச் சேர்ந்த பலரும் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். தமிழ்த் திரையுலகம் சார்பில் சரத்குமார், ராதிகா, ஆர்த்தி, காயத்ரி ரகுராம், ஷக்தி ஆகியோர் திருமணவிழாவில் பங்கேற்று நமீதாவை வாழ்த்தினர்.

Namveer20

Namveer21