//மிஸ்டர் சந்திரமெளலி

மிஸ்டர் சந்திரமெளலி

அதிரடியான கூட்டணிகள் தமிழ் சினிமாவில் பெரும் வெற்றிகளை பெற்றுள்ளன. அந்த பாணியில் சமீபத்தைய அதிரடி கூட்டணி தான் கார்த்திக்கும் அவரது மகன் கௌதம் கார்த்திக்கின் கூட்டணி.

விஷாலை வைத்து ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’, ‘சமர்’, ‘நான் சிகப்பு மனிதன்’ உள்ளிட்ட படங்களை எடுத்த இயக்குநர் ’திரு’ தான் முதல் முறையாக தந்தை, மகன் இணையும் படத்தை இயக்கப் போகிறார். ‘மிஸ்டர் சந்திரமெளலி’ என பெயரிட்டிருக்கும் இந்தப் படத்தில் கெளதம் கார்த்திக், கார்த்திக் தவிர வரலட்சுமி, ரெஜினா உள்ளிட்டோரும் நடிக்கவுள்ளனர். ‘மெளன ராகம்’ படத்தில் கார்த்திக் பயன்படுத்திய மிஸ்டர் சந்திரமெளலி என்ற பெயர் இளைஞர்கள் மத்தியில் பிரபலமான நிலையில் இந்தப் படத்தின் டைட்டில் ரசிகர்களிடம் அதிக ஆதரவினை பெற்றுள்ளது.

இப்படத்தை திரு. தனஞ்செயன் அவர்களின் ‘Creative Entertainers and Distributors’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தின் அறிவிப்பு வந்த நாளிலிருந்தே பரபரப்பும் எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது.

தென்னிந்தியாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான ரெஜினா கஸ்ஸான்ட்ரா இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த செய்தி இப்படத்திற்கு கூடுதல் ஈர்ப்பும் பலமும் கூட்டியுள்ளது. ஒரு முக்கியமான, பலம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கவுள்ளார் .

தேசிய விருது பெற்ற இயக்குனர்கள் மகேந்திரனும் அகத்தியனும் இப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். இக்கதையில் நடிகர் சதீஷ் தனது பாணி காமெடியில் அசத்தவுள்ளார். இந்த மெகா கூட்டணி ரசிகர்களை ஒரு விருந்தாக இருக்கும் என நம்பப்படுகிறது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் தலைப்பு ”மிஸ்டர் சந்திரமௌலி” என அறிவிக்கப்பட்டுள்ளது. காலங்களை தாண்டி தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் என்றுமே இருக்கும் பெயர் இது.

இது குறித்து இப்படத்தின் இயக்குனர் திரு பேசுகையில், ” இப்படத்தின் நடிகர்கள் கூட்டணி படத்திற்கு தூணாக அமைந்து படத்தை அடுத்த லெவெலுக்கு கொண்டுபோயுள்ளது. இயக்குனர் மகேந்திரன் சார், கார்த்திக் சார் மற்றும் அகத்தியன் சார் போன்ற ஜாம்பவான்களோடு பணிபுரிய வாய்ப்பு கிட்டியுள்ளதை நினைத்தால் மிக பெருமையாக உள்ளது. பல மடங்கு கூடியுள்ள எனது பொறுப்பை நன்கு அறிவேன். படத்தின் இந்த தலைப்பு எங்களுக்கு ஒரு பெரும் பலமாகியுள்ளது. இந்த எல்லா விஷயங்களின் சங்கமம் இந்த படத்தை மிக பெரிய படங்களுக்கு இணையாக ஆக்கி உள்ளது ” என நம்பிக்கையோடு கூறினார் இயக்குனர் திரு.

திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் இணையதள மீடியாக்களில் கால் பாதிக்கும் பாஃப்டா மீடியா ஒர்க்ஸ் இந்தியா என்ற புதிய மீடியா நிறுவனத்திற்காக கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் இத்திரைப்படத்தை தயாரிக்கிறது.

Mr Chandramouli

Flickr Album Gallery Powered By: Weblizar