//இது ‘மெர்சல்’ தீபாவளி

இது ‘மெர்சல்’ தீபாவளி

உலகமெங்கும் 3292 திரையரங்குகளில் ‘மெர்சல்’ வெளியாகவுள்ளது. இன்னும் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். இது ‘மெர்சல்’ தீபாவளி” என்று ’தேனாண்டாள் பிலிம்ஸ்’ ஹேமா ருக்மணி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

மெர்சல் படத்துக்கு அதிக கட்டணம் வசூலிக்க தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்ப்படுள்ளது.

படக்குழுவினர் இதுவரை மெர்சல் படத்தின் இரண்டு ப்ரொமோக்கள் வெளியிட்டுள்ளனர். டிரைலர் வெளியிடும் திட்டமில்லை என தெரிவித்துள்ளனர்.

அக்டோபர் 18-ம் தேதி வெளியீடு என்பதில் தீவிரமாக இருந்து வருகிறது ‘மெர்சல்’ படக்குழு. தற்போது இறுதிகட்டப் பணிகளை முடித்து வெளிநாட்டுக்கு அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் தமிழக அரசின் கேளிக்கை வரிவிதிப்பினை எதிர்த்து நடைபெற்றுவரும் போராட்டத்தை தொடர்ந்து இந்த தீபாவளியன்று மெர்சல் திரைப்படம் மட்டுமே வெளியாகும் என எதிர்பார்கப்படுகிறது.