//‘மெர்சல்’ பட பெயர் சர்ச்சை நிறைவு

‘மெர்சல்’ பட பெயர் சர்ச்சை நிறைவு

‘மெர்சல்’ பட பெயர் சர்ச்சை நிறைவு பெற்றதைத் தொடர்ந்து தயாரிப்பாளர் மற்றும் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

வழக்கு விவரம்

வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ஏஆர் பிலிம் பேக்டரி உரிமையாளார் ஏ இராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தன்து மகன் ஆரூத்தை கதாநாயகனாக அறிமுகப்படுத்தி “மெரசலாயிட்டேன்” எனற பெயரில் படத்தினை தயாரித்து வெளியட 2014-ஆம் ஆண்டே இந்த பெயரை தயாரிப்பாளார் சஙகத்தில் பதிவு செய்துள்ளேன்.

விஜய் படத்தின் “மெர்சல்” நான் பதிவுசெய்துள்ள மெரசலாயிட்டேன் எனற பெயரை ஒத்துள்ளதால் இப்படம் வெளியானால் தனக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் என்றும் இப்பெயரில் படம் வெளியாவதற்க்கு தடை விதிக்கவேண்டும் என்றும் அவர் மனுவில் கோரியிருந்தார்.

தீர்ப்பு

மெர்சல் – மெர்சலாயிட்டேன் இரண்டு பெயர்களுக்கும் வித்தியாசம் உள்ளது. மெர்சல் என்ற பெயரிலே திரைபடத்தை விளம்பரபடுத்தவும் வெளிய்டவும் அனுமதி அளித்து இவ்வழக்கினை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சர்சை முடிவடைந்ததையடுத்து ‘மெர்சல்’ படத்தின் இறுதிகட்டப் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளது. தீபாவளி வெளியீடு உறுதி என்று தயாரிப்பாளர் தரப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.