//இறுதிக்கட்டப் பணிகளில் மரகதக்காடு

இறுதிக்கட்டப் பணிகளில் மரகதக்காடு

தமிழக சினிமா வரலாற்றில் முழுக்க முழுக்க காட்டில் எடுக்கப்பட்ட ஒரே படம் என்கிற பெயரை ‘மரகதக்காடு ‘படம் பெற்றுள்ளது

இப்படத்தை அறிமுக இயக்குநர் மங்களேஷ்வரன் இயக்கத்தில். ஆர்.ஆர்.பிலிம்ஸ் சார்பில் ரகுநாதன் தயாரித்துள்ளார்.

அஜய், ராஞ்சனா , ஜெயஸ்ரீ மலையாள இயக்குநர் இலியாஸ் காத்தவன் ,ஜே.பி. மோகன். , ராமச்சந்திரன், பாவா லட்சுமணன் மற்றும் மலைவாழ் மக்கள் பலரும் நடித்துள்ளனர்.

இவர்கள் தவிர காடும் அருவியும் பிரதான பாத்திரங்களாய் படம் முழுக்க பயணித்துள்ளன .

காட்டுப்பகுதி மக்களின் வாழ்க்கை முறை , அவர்களின் நம்பிக்கைகள் காதலுக்கு தடையாக இருக்கிறது . அவன் சந்தித்த திருப்பங்கள் என்ன? முடிவு என்ன? என்பதே கதை .

காதலுடன் காடு , மக்கள் , அவர்களின் இயற்கை சார்ந்த நம்பிக்கைகள் , அவர்களது வாழ்வியல் , காட்டின் கனிம வளம் சுரண்டப்படுதல் போன்ற பலவும் கதையில் இருக்கும் .

‘மரகதக்காடு ‘படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.

72157686592493892

Flickr Album Gallery Powered By: Weblizar