இந்தியப் பொதுத் தேர்தல், 2019

இந்தியாவின் 17வது மக்களவையைக்கான 543 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதனுடன் ( ஆந்திரபிரதேசம், அருணாசல பிரதேசம், ஒடிஷா, சிக்கீம் மற்றும் ஜம்மு காஷ்மீர் என 5 மாநிலங்களுக்கான சட்டபேரவை தேர்தலும் நடைபெறவிருக்கின்றது.

தமிழகத்தில் முதல்வருக்கு எதிராக போர்க்கொடி துாக்கிய, தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள ( ஆண்டிப்பட்டி, அரூர் மாணாமதுரை பெரியகுளம், குடியாத்தம், பாப்பிரெட்டிபட்டி, அரவங்குரிச்சி, பரமகுடி, பெரம்பூர், சோளிங்கர், திருப்போரூர், பூவுருந்தவல்லி, தஞ்சாவூர், நிலக்கோட்டை, ஆம்பூர், சாத்தூர், ஒட்டபிடாரம் மற்றும் விளாத்திகுளம்) தொகுதிகள், திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக சார்பில் வெற்றிபெற்ற திரு. A.K. போஸ் அவர்களும் திருவாரூர் தொகுதியில் திமுக சார்பில் வெற்றிபெற்ற திரு. மு. கருணாநிதி அவர்களும் மரணமடைந்ததையடுத்து 20 தொகுதிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான தேர்தலும் சேர்த்து நடத்தப்படும் என்று எதிர்பார்கப்படுகிறது.

இதுவரை தேர்தல் தேதிகள் அறிவிக்கபடாத நிலையில் கூட்டணி பேரத்தில் மிக மும்மரமாக ஈடுப்பட்டுள்ளன.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறநிலையில் தமிழத்தில் இருக்கும் மாநிலக் கட்சிகள் குறித்த தகவல் ஒன்றைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அ.தி.மு.க), திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க) மற்றும் தேசிய முற்போற்கு திராவிட கழகம் (தே.மு.தி.க) ஆகிய மூன்று கட்சிகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டு அங்கீகாரம் பெற்ற மாநிலக் கட்சிகளாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை தவிர்த்து, ம.தி.மு.க, தமிழ் மாநில காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் பதிவு மட்டுமே செய்யப்பட்டுள்ளது எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *