பொதுத்தேர்தல் தேதி அறிவிப்பு

இந்தியாவின் 16வது மக்களவையையின் ஆயுட்காலம் எதிர்வரும் ஜூன் மாதம் 3ஆம் நாளன்று முடிவுபெரும் நிலையில் 17வது மக்களவையைக்கான 543 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது.

இதற்கான தேர்தல் தேதி அறிவிக்கபடாமல் பல சர்சைகளை ஏற்படுத்தியநிலையில் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பைத் தேர்தல் ஆணையம் இன்று ( 10-மார்ச்-2019) மாலை 5.00 மணிக்கு டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் தேர்தல் ஆணையர் சுனில் ஆரோரா மற்றும் அசோக் லவசா, சுசில் சந்திரா ஆகியோர் கூட்டாக ஊடகங்களுக்கு தேர்தல் தேதி அறிவிப்பை வெளியிட்டனர். அதன்படி

முதல்கட்ட வாக்குப்பதிவு: ஏப்ரல் 11ம் தேதி – 20 மாநிலங்களில் 91 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு
2-ம் கட்ட வாக்குப்பதிவு: ஏப்ரல் 18-ம் தேதி – 13 மாநிலங்களில் 97 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு
3ம் கட்ட வாக்குப்பதிவு: ஏப்ரல் 23-ம் தேதி 14 மாநிலங்களில் 115 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு
4-ம் கட்ட வாக்குப்பதிவு: ஏப்ரல் 29-ம் தேதி 9 மாநிலங்களில் 71 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு
5-ம் கட்ட வாக்குப்பதிவு: மே 6-ம் தேதி 7 மாநிலங்களில் உள்ள 51 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு
6-ம் கட்ட வாக்குப்பதிவு: மே 12-ம் தேதி 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு
7-ம் கட்ட வாக்குப்பதிவு: மே 19-ம் தேதி 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு

இறுதியாக வாக்குப்பதிவு முடிந்து வாக்கு எண்ணிக்கை மே 23-ம் தேதி நடைபெறுகிறது.

தமிழகம்

2-ம் கட்டமாக வாக்குபதிவு நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் இடம்பெருகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார். இதைத்தொடர்ந்து தமிழக சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தல் குறித்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு சென்னையில் அறிவித்தார். அவர் கூறியதாவது:

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து காலியாகவுள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு (பெரம்பூர், பூந்தமல்லி, திருப்போரூர், பாப்பிரெட்டிபட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், அரூர், பரமக்குடி, மானாமதுரை, சோளிங்கர், தஞ்சாவூர், நிலக்கோட்டை, ஆம்பூர், சாத்தூர், குடியாத்தம், விளாத்திகுளம், திருவாரூர் மற்றும் ஒசூர்) ஆகிய தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெறும். திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி ஆகிய மூன்று தொகுதிகளில் வழக்கு நிலுவையில் இருப்பதால் அங்கு பின்னர் தேர்தல் நடத்தப்படும்.

தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் நாள்: 19 மார்ச் 2019
வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள்: 26 மார்ச் 2019
வேட்பு மனு பரிசீலணை நடைபெரும் நாள்: 27 மார்ச் 2019
வேட்பு மணு திரும்பபெற கடைசி நாள்: 29 மார்ச் 2019
வாக்கு பதிவு நடைபெறும் நாள்: 18 ஏப்ரல் 2019

இந்த அறிவிப்புடன், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அனைத்தும் நடைமுறைக்கு வருகிறது. இதன்பின் எந்தவிதமான திட்டங்களையும், அறிவிப்புகளையும் மத்திய அரசு வெளியிட முடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *