//இசைஞானின் இசையமைப்பில் களத்தூர் கிராமம்

இசைஞானின் இசையமைப்பில் களத்தூர் கிராமம்

கிராமம் அதன் மண் , மக்கள் வாழ்க்கையைப் பற்றி செயற்கைப் பூச்சின்றி சொல்லப்பட்ட கதைகள் தமிழ்த் திரையுலகில் வெற்றி பெற்றுள்ளன. அவ்வரிசையில் இடம் பெறும் வகையில் உருவாகியுள்ள படம் தான் ‘களத்தூர் கிராமம்’ . இப்படத்தை எழுதி இயக்கியிருப்பவர் ​​சரண் கே. அத்வைதன். ஏ.ஆர். மூவி பேரடைஸ் சார்பில் ஆவுடைத்தாய் ராமமூர்த்தி தயாரித்துள்ளார்.​ டட்டூ சினிமா ஆரூர் சுந்தரம் தமிழகமெங்கும் பிரம்மாண்டமாக வெளியிடுகிறார்​.

நாயகனாக கிஷோர் மற்றும் நாயகியாக யக்னா ஷெட்டி, இவர்கள் தவிர ‘தகராறு ‘சு​லீ​ல்​ குமார்​, அஜய் ரத்னம் , தீரஜ் ரத்னம்ர​, ​​ஜினி மகா தேவ​ய்​யா ஆகியோரும் நடித்துள்ளனர்.

இப்படத்தின் கதைகரு ஒரு புறக்கணிக்கப்பட்ட கிராமத்தின் கதை என்று கூறலாம். அந்தக் கிராமத்தைப் போலீஸ் வஞ்சிக்கிறது. இதனால் அவமதிப்பும் ஏமாற்றமும் புறக்கணிப்பும் அனுபவிக்கிற மக்கள் போலீசை எதிர்க்கிறார்கள் . ​யார் வெல்கிறார்கள்? என்பதே கதை.

கதை பிடித்துப்போன ​பிறகே இசையமைக்க ஒப்புக் கொண்டு இசைஞானி இளையராஜா ‘களத்தூர் கிராமம்’ படத்துக்கு இசையமைத்துக் கொடுத்திருக்கிறார்.

இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளவர் புஷ்பராஜ் சந்தோஷ் , இசை – இசைஞானி இளையராஜா , பாடல்கள்- இளையராஜா, கண்மணி சுப்பு ,எடிட்டிங் -சுரேஷ் அர்ஸ் , நடனம் – நிர்மல் , ஸ்டண்ட் – மகேஷ்- ஓம் பிரகாஷ் .

தூத்துக்குடி மாவட்டம் புதுப்பட்டி, கழுகுமலை , விளாத்திகுளம் , சங்கரன் கோவில் , முத்தலாபுரம் பகுதிகளிலும் படப்பிடிப்பினை நடத்தி 60 நாட்களில் முழுப்படத்தையும் முடித்துவிட்டு ​திரும்பியுள்ளனர்.