//களத்தூர் கிராமம் – அதிகரிக்கும் திரையரங்குகள்

களத்தூர் கிராமம் – அதிகரிக்கும் திரையரங்குகள்

கிஷோர், யக்னா ஷெட்டி, ரஜினி மஹாதேவய்யா, சுலீல் குமார், மிதுன்குமார், அஜய்ரத்னம், தீரஜ் ரத்னம் ஆகியோர் நடிப்பிலும், இசைஞானியின் இசை ஆளுமையிலும், இயக்கு​ந​​ர் சரண் கே.அத்வைதனின் தெளிவான திரைக்கதை​,​ இயக்கத்திலும் இந்த உருவாகிய படம் களத்தூர் கிராமம்.

இதன் வெற்றிகுறித்து குறித்து தயாரிப்பாளர் சீனுராஜ் கூறியதாவது,

இத்திரைப்படம் முதல்முறை போதுமான திரையரங்குகள் கிடைக்காமல் போன காரணத்தினாலும், இரண்டாவது முறை ரிலீஸ் தேதி அறிவித்தபோது தயாரிப்பாளர் சங்கத்தின் வேலைநிறுத்தம் காரணமாகவும் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது.

அக்டோபர்-27ஆம் தேதி படம் 80 திரையரங்குகளில் வெளியானது. நல்ல சினிமாவை நேசிக்க​க்​ கூடிய சில திரையரங்க நண்பர்கள் அவர்களாகவே படத்தை​க்​ கேட்டு வாங்கி திரையிட்டார்கள்.

ஒரு நல்ல படம் மக்களை சென்றடைவதற்கே ஒரு வாரம் தேவைப்படுகிறது. ​’​​ஓ​ப்பனிங் வியாபாரம்​’​ என்கிற யுத்தியை மட்டுமே கடந்தகால சினிமா கடை​ப்​பிடித்து வருகிறது என்பது வேதனை.. சிறிய படங்களுக்கும் நல்ல படங்களுக்கும் 15 நாட்களாவது அந்தப்படம் திரையிடப்பட்டால், திரையரங்கை விட்டு எடுக்காமல் இருந்தாலே போதும்.. எட்டவேண்டிய வெற்றியை எட்டிவிடும்..

மழை மற்றும் இந்த வார வெளியீடுகள் தாண்டி ‘களத்தூர் கிராமம்’ நிலைத்து நிற்பதும், கூடுதல் திரையரங்குகள் கிடைப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது​.

பெரிய நடிகர்கள் நடித்தால் அல்லது பெரிய தயாரிப்பாளர் படம் என்றாலோ, பெரிய இயக்குநர்கள் இருந்தால் மட்டுமே சில பிரபலங்கள் சமூக வலைதளங்களில் பாராட்டுகிறார்கள். சில நல்ல படங்கள் வரும்போது அதைப் பார்த்துவிட்டு பாராட்டினால் சிறு படங்கள் வெற்றிபெறும் ​என்று தயாரிப்பாளர் ​A.R. ​சீனுராஜ் கூறினார்.