//கா-வியன்

கா-வியன்

நடிகர் ஷாம் தற்போது “ 2M cinemas ” K.V. சபரீஷ் தயாரிப்பில், சாரதி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் ஒரு பிரம்மாண்ட படத்தில் நடித்துள்ளார். ரோட் திரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்துக்கு தமிழில் “ கா-வியன் “ என்றும் தெலுங்கில் “ வாடு ஒஸ்தாடு “ என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஷாம் ஜோடியாக ‘மனம் கொத்திப் பறவை’ புகழ் ஆத்மியா நடிக்கும் இப்படத்தில் ஸ்ரீதேவி குமார், ஸ்ரீ நாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கோலிவுட் நடிகர் ஜெஸ்டின் விகாஸ் இந்த படத்தின் வில்லனாக நடித்துள்ளார்.

 

முழுக்க முழுக்க அமெரிக்காவிலுள்ள லாஸ்வேஹாசில் ஹாலிவுட் தரத்தில் உருவாகியுள்ள முதல் தமிழ் திரைப்படம் இது என்ற பெருமையை காவியன் நிச்சயம் பெரும். சண்டைக் காட்சிகளும், திரைக்கதையும் தொடக்கம் முதல் இறுதிவரை பிரமிக்கும் வகையில் இருக்கும். மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ள இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.