//காலா படத்தின் செம வெயிட் பாடல் யூடியூப்பில் வெளியிடப்பட்டது

காலா படத்தின் செம வெயிட் பாடல் யூடியூப்பில் வெளியிடப்பட்டது

ரஜினி நடிப்பில் தற்போது உருவாகி ஜூன் 7 அன்று திரைக்கு வரவிருக்கும் படம் ‘காலா’. இந்த படத்தில் ரஜினிகாந்த் திருநெல்வேலியில் இருந்து மும்பை சென்று வசிக்கும் தாதா கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். பெரும்பகுதி படப்பிடிப்பை மும்பை தாராவி பகுதியில் நடத்தி முடித்தனர். இதில் கதாநாயகியாக கியூமா குரோஷி வருகிறார். சமுத்திரக்கனி, சம்பத், நானா படேகர், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், அஞ்சலி பட்டேல், அருந்ததி, சாக்‌ஷி அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பா.ரஞ்சித் இயக்க நடிகர் தனுஷ் தயாரித்துள்ளார்.

‘காலா’ படத்தின் பாடல்கள் 9 ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் ‘செம வெயிட்டு’ என்ற பாடலை உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு இன்று இரவு 7 மணிக்கு வெளியிட இருப்பதாக தனுஷ் அறிவித்திருந்தார்.

அதன்படி இன்று மாலை 7 மணிக்கு செம வெயிட்டு பாடல் யூடியூப்பில் பாடல் வெளியிடப்பட்டது. பாடல் வெளியிட்ட சில நிமிடங்களிலேயே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளிலும் தயாரிப்பு நிறுவனம் பாடலை வெளியிட்டது.

இப்படத்தின் ஸடிலைட் உரிமையினை ஸ்டார்டிவி குழுமம் பெற்றுள்ளது.

பாடல் வெளியிட்ட சில நிமிடங்களிலேயே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த வீடியோவை காண்க