//ஹர ஹர மஹாதேவகி டீஸர்

ஹர ஹர மஹாதேவகி டீஸர்

ப்ளூ கோஸ்ட் பிக்சர்ஸ் மற்றும் தங்கம் சினிமாஸ் இணைந்து தயாரிப்பில் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக், நிக்கி கல்ரானி, சதீஷ், பால சரவணன், ராஜேந்திரன், கருணாகரன், மனோபாலா, மயில்சாமி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாலமுரளி இசையமைத்துள்ள இப்படத்திற்கு செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தை பற்றி இயக்குனர் கூறியதாவது, “இந்த காலத்து இளைஞர்களுக்கு பிடித்த வகையில் ‘ஹர ஹர மஹாதேவகி’ படம் உருவாக்கப்பட்டுள்ளது. கதாநாயகன் கவுதம் கார்த்திக் மற்றும் கதாநாயகி நிக்கி கல்ராணிக்கும் இடையே காதல் முறிவு ஏற்படுகிறது. இதனால் ஏற்படும் குழப்பங்களே படத்தின் கதை என தெரிவித்தார்.

தணிக்கையில் ‘ஏ’ சான்றிதழ் கிடைத்ததைத் தொடர்ந்து, செப்டம்பர் 29-ம் தேதி ‘ஹர ஹர மஹாதேவகி’ வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.