//ஹர ஹர மஹாதேவகி பஜனை 2-வது வாரம் தொடர்கிறது

ஹர ஹர மஹாதேவகி பஜனை 2-வது வாரம் தொடர்கிறது

செப்டம்பர் 29-ம் தேதி வெளியான படம் ‘ஹர ஹர மஹாதேவகி’. ‘ஸ்பைடர்’ மற்றும் ‘கருப்பன்’ ஆகிய படங்களோடு வெளியானாலும், அனைத்து தரப்புக்கும் நல்ல லாபத்தை அளித்துள்ளது என்று விநியோகஸ்தர்கள் தரப்பில் தெரிவித்தார்கள். குறைந்த முதலீட்டில் எடுக்கப்பட்டு, குறைந்த விலைக்கு விற்கப்பட்டதுதான் அதற்குக் காரணம் என்றார்கள்.

திரைதுறையினரின் தமிழக அரசு சமீபத்தில் புதிதாய் விதித்த கேளிக்கை வரியைனை எதிர்த்து மேற்கொண்டிருக்கும் போராட்டத்தை தொடர்ந்து கடந்த வெள்ளிகிழமையன்று ( அக்டோபர் 3) புதியதிரைப்படங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. இதைதொடர்ந்து சென்ற வாரம் வெளியான  ‘ஹர ஹர மஹாதேவகி’ படத்துக்கு தமிழகமெங்கும்  திரையரங்குகள் அதிகரிப்பட்டுள்ளதைக் தொடர்ந்து படக்குழு பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறது.

மேலும், 2-வது வாரத்தில் சுமார் 100 திரையரங்குகள் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனை படக்குழு இன்றைய விளம்பரத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்கள். இதனால் இந்த வார வசூல் கண்டிப்பாக கூடும் என்பதால் படக்குழு பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

இதன் வெளியீட்டு உரிமையை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் படப்பிடிப்புக்கு முன்பே கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது