//‘கோலி சோடா 2’ உருவாகிவருகிறது

‘கோலி சோடா 2’ உருவாகிவருகிறது

விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘கோலி சோடா 2’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இதில் ”ஸ்டைலிஷ் ‘ இயக்குனர் கவுதம் வாசுதேவ மேனன் ஒரு சிறப்பு தோற்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதே தற்போதய சுவாரஸ்யமான செய்தி.

சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்ற ‘கோலி சோடா 2’ படத்தின் டீஸருக்கு ‘வாய்ஸ் ஓவர்’ தந்தது இயக்குனர் கவுதம் வாசுதேவ மேனனே என்பது குறிப்பிடத்தக்கது.

அடையாளத்திற்கும், அங்கீகாரத்திற்கும் போராடுவதை மையமாக வைத்து பிண்ணப்பட்டுள்ள இக்கதையில் புதுமுகங்கள் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை விஜய் மில்டனின் சகோதரர் பரத் சீனியின் ‘Rough Note’ நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் சமுத்திரக்கனி மற்றும் கிஷோர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பரத் சீனி, வினோத் , பரத், சுபிக்ஷா, கிரிஷா, ரக்ஷிதா, ரோகினி, ரேகா, சரவணா சுப்பையா, செம்பன் ஜோஷ் மற்றும் ஸ்டன் ஷிவா ஆகியோர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்துவருகிறது. நான் நினைத்ததை விட மேலும் சிறப்பாக’கோலி சோடா 2′ உருவாகிவருகிறது”