//திரைக்கு தயாராகிறது “ஆயிரத்தில் இருவர்”

திரைக்கு தயாராகிறது “ஆயிரத்தில் இருவர்”

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குநர் சரண் வினய்யை ஹீரோவாக வைத்து தயாரித்து இயக்கியிருக்கும் படம் ஆயிரத்தில் இருவர்.

வினய்க்கு ஜோடியாக சமுத்ரிகா, ஸ்வாஸ்திகா கேஷா என்று மூன்று புதுமுக நாயகிகள் நடித்துள்ளனர். சரணின் காதல் மன்னன் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமான பரத்வாஜ், நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த படத்தில் ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறார். கிருஷ்ணராமன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

வினய் வில்லனாக நடித்த துப்பறிவாளன் படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அதோடு வினய்யின் நடிப்பும் பெரிதாக பேசப்பட்டு வருவதால், இந்த சூழ்நிலையில் படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறார் சரண்.

படத்தின் அறிவிப்பு தேதிகள் இரண்டு முறை அறிவிக்கப்பட்டு தள்ளிவைக்கப்பட்டது. தற்போது வருகிற செப்டம்பர் 22 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டு இருக்கின்றனர்.

ஆயிரத்தில் இருவர்

Flickr Album Gallery Powered By: Weblizar