//நயன்தாராவின் அட்டகாசமான நடிப்பில் அறம்

நயன்தாராவின் அட்டகாசமான நடிப்பில் அறம்

பெயர் வைக்காமலேயே ராமநாதபுரத்தில் பெரும்பகுதி படமாக்கப்பட்ட நிலையில் தற்போது இப்படத்துக்கு ‘அறம்’ என்று பெயரிட்டுள்ளனர். இதில் நயன்தாராவுடன் ‘காக்கா முட்டை’ சகோதரர்கள் விக்னேஷ் – ரமேஷ், வேல. ராமமூர்த்தி, ராமதாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

ஒரு படத்தின் வெற்றிக்கும், மக்கள் மேல் அது ஏற்படுத்தும் தாக்கத்திற்கும் அப்படத்திற்கு சென்சார் குழு என்ன சான்றிதழ் வழங்குகிறது என்பது ஒரு மிக முக்கிய பங்கு வகிக்கும். நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து கோபி நைனார் இயக்கத்தில் கொட்டப்படி J ராஜேஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘அறம்’. சென்சார் குழுவின் தணிக்கைக்கு சென்ற இப்படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இப்படத்தை பார்த்த சென்சார் குழுவினர் இக்கதையையும், படத்தில் துணிவாகவும் திறம்படவும் அலசப்பட்டிருக்கும் சமுதாய பிரச்சனைகளையும் மனமார பாராட்டியுள்ளனர். இந்த பாராட்டு ‘அறம்’ பட குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இப்படம் விரைவில் பிரம்மாண்டமாக ரிலீசாகவுள்ளது. ஜிப்ரானின் இசையில், ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவில் ‘அறம்’ உருவாகியுள்ளது.

அறம் – பெயர் காரணம்

இதுகுறித்து இப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் சௌந்தர் பைரவி கூறும்போது “இந்தப் படம் முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியைக் கொண்டது. இதில் நயன்தாரா கலெக்டராக நடிக்கிறார். இப்படத்தில் அவர் அறம் சார்ந்து பல நல்ல விஷயங்களை செய்ய முயல்கிறார். அவற்றில் தொடர்ந்து தோல்விகளை எதிர்கொண்டாலும், தீவிரமாகப் போராடி இறுதியில் அறத்தால் வெல்கிறார். அதனால்தான் இப்படத்துக்கு அறம் என்று பெயர் வைத்துள்ளோம்