49வதுஇந்திய சர்வதேச திரைப்பட விழா- கோவா

1952 ஆம் ஆண்டில் இந்திய அரசின் திரைப்படத் துறையால் அப்போதைய பிரதமர் திரு. ஜவஹர்லால் நேரு அவர்களின் அமோக ஆதரவுடன் தொடங்கப்பட்டது.

இந்திய சர்வதேச திரைப்பட விழா (ஐ.எஃப்.எஃப்.ஐ) உலக திரைப்பட சந்தைக்கு ஒரு பொதுதளமாக அமைந்துள்ளது. இவ்விழா ஆசியாவில் நடைபெரும் முதலாவது திரைப்பட விழா, மற்றும் இந்தியாவின் மிகவும் பெருமைமிகு விழாவாகும்.

கோவா முதலமைச்சர் திரு. மனோஜ் பரிக்கர் அவர்களின் பெருமுயற்சியால் கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து கோவாவிற்கு 2004 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது, இவ்விழா.

48 ஆண்டுகள் பழமையானதாகவும், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கோவாவில் நடைபெற்றுவரும் இத்திரைப்பட விழாவில் இவ்வாண்டு சர்வதேச அளவில் 65 நாடுகளிலிருந்து திரைப்படங்கள் திரையிடப்படுகின்றது.

இவ்விழாவில், இந்தியன் பனோரமா பிரிவில் திரையிட நான்கு தமிழ்த் திரைப்படங்கள் தேர்வாகியுள்ளன. இந்திய அளவில் மொத்தமாக தேர்வாகியுள்ள 22 திரைப்படங்களில் 4 திரைப்படங்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவை.

சமூக அடக்குமுறை மற்றும் தலித் அரசியலை மிக நேர்த்தியாகவும், நுணுக்கமாகவும் கையாண்டதற்காக விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டு தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மாரி செல்வராஜின் பரியேறும் பெருமாள் திரைப்படம் திரையிடப்பட உள்ளது. இத்தகவலை பரியேறும் பெருமாள் தயாரிப்பாளர் பா.ரஞ்சித் உறுதிப்படுத்தியுள்ளார்.

இயக்குனர் ராமின் பேரன்பு திரைப்படமும் இவ்விழாவில் திரையிடப்பட உள்ளது. மம்மூட்டி, பேபி சாதனா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பேரன்பு கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுவது சினிமா ரசிகர்களுக்கும், கலை விரும்பிகளுக்கும் மகிழ்ச்சியான செய்தியாகும்.

ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கியுள்ள முதல் படமான டூலெட் திரைப்படமும் விழாவில் திரையிடப்பட உள்ளது. இப்படம் தேசிய விருதை பெற்றதோடு மட்டுமல்லாமல் பல நாடுகளில் திரையிடப்பட்டு 25க்கும் மேற்பட்ட விருதுகளை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இவற்றுடன் பிரியா கிருஷ்ணசாமியின் பாரம் திரைப்படமும் திரையிடப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *