//2.0 – ஆடியோ வெளியீட்டு விழா

2.0 – ஆடியோ வெளியீட்டு விழா

ஷங்கர்-ரஜினி-அக்‌ஷய் குமார்-ஏ.ஆர்.ரஹ்மான்-லைகா காம்போவில் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் முதல் இந்திய படம்’, ‘நேரடியாக 3டியில் ஷூட் செய்யப்படும் முதல் இந்தியப் படம்’ உள்பட நிறைய பெருமைகளுடன் தொடங்கப்பட்ட ‘2.0’, தற்போது, ‘இந்தியாவின் மிகப்பெரிய ஆடியோ வெளியீட்டு விழா’ என்ற பெருமையை துபாயில்  ‘2.0’ படத்தின் ஆடியோ வெளியீடு நடைபெற்றது

2.0′ வெளியான பிறகு இந்தியர்கள் மட்டுமின்றி அயல் நாட்டினரும் படத்தைக் கொண்டாடுவர் என்று ரஜினி தெரிவித்தார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றதால், விளம்பரப்படுத்தும் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளது படக்குழு.

முன்னதாக துபாயில் படக்குழு பத்திரிகையாளர்களை சந்தித்தது. இச்சந்திப்பில் ரஜினி, அக்‌ஷய்குமார், ஏமி ஜாக்சன், இயக்குநர் ஷங்கர், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் கலந்து கொண்டனர்.

2.09
2.10
2.11

பத்திரிகையாளர்கள் மத்தியில் ரஜினி பேசியதாவது:

கடவுளின் கருணையாலும் மக்களின் அன்பாலும்தான் இந்த நிலைக்கு வந்திருக்கிறேன். ‘2.0’ படத்தில் என்னை நடிக்க வைத்த தயாரிப்பாளர் சுபாஷ்கரன் மற்றும் இயக்குநர் ஷங்கருக்கு நன்றி.

பெருமைமிக்க இந்தப் படத்தின் ஒரு பங்காக நான் இருப்பதில் மகிழ்ச்சி. இது நிச்சயம் பெருமைக்குரிய, பெரிய பட்ஜெட் படமாக இருக்கும். ‘2.0’ வெளியான பிறகு இந்தியர்கள் மட்டுமின்றி அயல் நாட்டினரும் படத்தைக் கொண்டாடுவர்.

பத்திரிகையாளர்கள் மத்தியில் அக்‌ஷய்குமார் பேசியதாவது:

”இந்தப் படத்தில் நான் வில்லனாக நடித்திருக்கிறேன். ஆனாலும் ரஜினி சாரின் நடிப்பு அதை மிஞ்சிவிட்டது. இது முற்றிலும் எனக்கு வித்தியாசமான அனுபவம். ஷங்கர் ஓர் இயக்குநராக மட்டும் அல்லாமல் அறிவியலாளராகவும் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்.

படத்தில் யாராலும் நம்பவே முடியாத விஷயங்கள் ஏராளம் இருக்கின்றன. ஒப்பந்தத்தின் காரணமாக இதற்கு மேல் படத்தின் கதை குறித்து என்னால் எதுவும் கூற இயலாது”

2.0 படத்தின் இசை வெளியீடு புர்ஜ் அல் அராப் ஹோட்டலில் நடக்கிறது. முதன் முறையாக இந்த இடத்தில் நிகழ்ச்சியை நடத்த துபாய் அரசாங்கம் உத்தரவு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. துபாயில் முதல் முறையாக பேனர்கள், டிஜிட்டல் விளம்பரங்கள் செய்யப்படும் முதல் படம் 2.0 என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் துபாயில் உள்ள பெரிய மால்களில் ரூபாய் 2 கோடி செலவில் பிரம்மாண்ட எல்.இ.டி. திரை அமைக்கப்பட்டு இந்நிகழ்ச்சியை நேரலையாக ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

2.05

 

2.06

 

2.12

நிகழ்ச்சியில் பிமாண்டத்தை உறுதி செய்ய ரகுமானும், சங்கரும் ரயில் வடிவிலான வாகனத்திலேயே மேடைக்கு வந்தனா். நிகழ்ச்சியில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 125 சிம்பொனி கலைஞர்களுடன் இணைந்து இசை நிகழ்ச்சியை நேரலையாக நடத்தினார். மேலும் 2.0 படத்திலிருந்து ஒரு பாடலை இந்நிகழ்ச்சியில் நேரலையாக இசையமைத்தாா்.

2.20

இந்நிகழ்ச்சியினை துபை மன்னரும் கண்டுகளித்தார்.

2.22
2.24

இதனைத் தொடா்ந்து 2.0 வின் இரண்டு பாடல்கள் முதல்கட்டமாக வெளியடப்பட்டுள்ளது. பாடல் வெளியான வெகுசில மணித்துளிகளிலேயே பாடல்கள் இணையத்தில் வைரலாகத் தொடங்கின.