//100% காதல் பட பூஜை

100% காதல் பட பூஜை

கிரியேட்டிவ் சினிமாஸ் NY மற்றும் NJ எண்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கும் படம் 100% காதல். தெலுங்கில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘100% லவ்’ படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது.

புதுமுகம் எம்.எம்.சந்திரமெளலி இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார். இப்படத்தின் நாயகனாக ஜி.வி.பிரகாஷ் நடித்து இப்படத்திற்கு இவரே இசையும் அமைக்கிறார். தற்போது தெலுங்கில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் நாயகி ஷாலின் பாண்டே இப்படம் மூலம் தமிழில்  நாயகியாக அறிமுகமாகிறார்.

சென்னை எக்ஸ்பிரஸ், தில்வாலே, சிங்கம் என பல ஹிந்தி படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய டட்லி இப்படதின் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்.

லண்டனில் இப்படத்தின் பெரும்பகுதி காட்சிகளை படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. அக்டோபர் 11-ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கப்படு, 2018 கோடை விடுமுறைக்கு படம் வெளியாகும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது.

100% காதல்

Flickr Album Gallery Powered By: Weblizar