//ஸ்பைடர்

ஸ்பைடர்

A R முருகதாஸ்- மகேஷ் பாபுவின் மாபெரும் கூட்டணியில் வெளிவந்திருக்கும் படம் ‘ஸ்பைடர்’. இந்திய சினிமாவின் முக்கிய இயக்குனர்களின் ஒருவரான A R முருகதாஸும் , தென்னிந்தியாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான மகேஷ் பாபுவும் இணைந்து இருப்பதால் இப்படத்திற்கு இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ஹிந்தி பட உலகில் சக்கை போடு போட்ட ‘தனு வெட்ஸ் மனு:ரிட்டர்ன்ஸ்’ படத்தில் மாபெரும் ஹிட்டான ‘பண்ணோ’ பாடலை பாடி புகழின் உச்சிக்கு சென்றுள்ள பாடகர் பிரிஜேஷ் சாண்டில்ய , ‘ஸ்பைடர்’ படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஒரு பாடல் பாடியுள்ளார் என்பது சிறப்பு செய்தியாகும்.

பெரிதும் எதிர்பார்ப்பிற்குள்ளாகியுள்ள இப்படம் திறமையான பாடகர்களின் இந்த கூட்டணி, ஹிட்டுக்கு மேல் ஹிட் கொடுக்கும் லாவகத்தை நன்கு அறிந்த ஹாரிஸ் ஜெயராஜுடன் சேரும் பொழுது நடக்கக்கூடும் மேஜிக்கை ரசிக்க ரசிகர்கள் ஆவலோடு உள்ளனர். இந்த பிரம்மாண்ட படத்தை திரு N.V.பிரசாத் மற்றும் திரு. தாகூர் மது தயாரித்துள்ளனர் . சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவில் ‘ஸ்பைடர்’ உருவாகிவருகிறது. இப்படத்தில் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங்க் நடித்துள்ளார். S J சூர்யா, பரத் மற்றும் R J பாலாஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் இப்படத்தில் நடித்துள்ளனர்.

ஸ்பைடர்

Flickr Album Gallery Powered By: Weblizar