//தீரன் அதிகாரம் ஒன்று – பத்திரிக்கையாளர் சந்திப்பு

தீரன் அதிகாரம் ஒன்று – பத்திரிக்கையாளர் சந்திப்பு

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு, எஸ்.ஆர். பிரபு தயாரிப்பில் உருவாகியுள்ள தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது இதில் கார்த்தி , தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு , ரகுல் ப்ரீத் சிங் , இயக்குநர் H.வினோத் , ஜிப்ரான் , கலை இயக்குநர் கதிர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கார்த்தி பேசியது :-

தீரன் அதிகாரம் ஒன்று வழக்கமான போலீஸ் திரைப்படங்களில் இருந்து முற்றிலும் புதுமையான படமாக இருக்கும்.

இந்த படத்தின் கதை நான் “ சிறுத்தை “ படத்துக்காக படபிடிப்பில் இருந்த போதே எனக்கு தெரியும். அப்போது வந்த அதே கதை மீண்டும் என்னிடம் வந்தது. நம்மை சுற்றியே இந்த கதை வந்துகொண்டு இருக்கிறதே என்று நான் யோசித்து இந்த கதையில் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து நடித்தேன்.

தீரன் அதிகாரம் ஒன்று முழுக்க முழுக்க ஆக்ஷ்ன் படமாக இருக்கும். ரகுல் ப்ரீத் சிங் உடன் நான் நடித்த காதல் காட்சிகள் நன்றாக வந்துள்ளது.

IMG_1212
IMG_1303

இந்த படத்தில் காலையில் காரை ஸ்டார்ட் பண்ணும் போது கேட்க ஒரு அழகான மெலடி பாடல் , காரை எனர்ஜியுடன் ஓட்ட ஒரு ஹிந்தி குத்து பாடல் , காரை வேகமாக ஒட்டி செல்லும் போது கேட்க ஒரு ஹீரோ இன்ட்ரோ பாடல் , மீண்டும் ஒரு அழகான மெலடி என்று மனதுக்கு மிகவும் நெருக்கமான பாடல்களை நமக்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் தந்துள்ளார்.

IMG_1378
IMG_1382

தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் எந்த போலீஸ் படத்தின் சாயலும் தெரியாது. இயக்குநர் என்னிடம் என்ன கேட்டாரோ அதை நான் இந்த படத்தில் தந்துள்ளேன். தீரன்-ல் நான் இயக்குநரின் நடிகராக தான் இருந்துள்ளேன். இந்த படம் பெண்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் என்றார் கார்த்தி.

நிகழ்ச்சியில் இயக்குநர் வினோத் பேசியது

போலீஸ் என்றாலே தவறானவர்கள் தான் என்ற பிம்பம் மக்கள் மனதில் உள்ளது. அதற்கு காரணம் வாட்ஸ்ஆப்பில் வரும் போலீஸ் வீடியோக்கள் தான். அந்த தவறான பிம்பத்தை மாற்ற வேண்டும் என்பது என்னுடைய எண்ணம். எப்படி சினிமாவில் , அரசியலில் , பத்திரிக்கையாளர்களில் நல்லவர்கள் கெட்டவர்கள் இருக்கிறார்களோ அதே போல் தான் காவல் துறையிலும் நல்லவர்கள் கெட்டவர்கள் என்று இருக்கிறார்கள். நிஜமான போலீஸ் அதிகாரிகள் எப்படி இருப்பார்களோ அதேபோல் தான் இந்த படத்திலும் இருப்பார்கள். தீரன் அதிகாரம் ஒன்று கமர்ஷியல் படம். எல்லோருக்கும் இப்படம் ஒரு பாடம் போல் இருக்கும். ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள ஒரு படம். படத்தில் தீரன் திருமாறன் என்ற போலீஸ் அதிகாரியாக கார்த்தி நடித்துள்ளார். போலீசை சுற்றி நடக்கும் பரபரப்பான கதையாக இதை உருவாக்கியுள்ளோம். ஜிப்ரான் மிகச்சிறந்த பாடல்களை இந்த படத்துக்கு தந்துள்ளார் என்றார் இயக்குநர் வினோத்.

இத்திரைப்படம் நவம்பர் 17 அன்று வெளிவரவுள்ளது.