//காலா டீசர்

காலா டீசர்

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘காலா’. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் இப்படத்தைத் தயாரித்திருக்கிறது. தனுஷ் தயாரிக்க, லைகா நிறுவனம் வெளியிடும் இந்தப் படத்தில், நானா படேகர், சமுத்திரக்கனி, ‘வத்திக்குச்சி’ திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், ஹுமா குரேஷி, அஞ்சலி பட்டேல், சாக்ஷி அகர்வால் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கிய ‘காலா’ திரைப்படம் வரும் ஏப்ரல் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்படத்தின் டீசர் மார்ச் மாதம் 1ஆம் தேதியன்று வெளியிடப்படும் என்று தனுஷ் தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் அறிவித்தபடி டீசர் வெளிவராதது ரஜினி ரசிகர்களை பெரும் ஏமாற்றமடைய செய்தது.

ஆனால் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே தனுஷ் தனது டிவிட்டர் பதிவில் டீசரை வெளியிட்டார்

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டே முடிந்து விட்டபோதும், ‘2.O’ படத்திற்காக காலா படத்தின் ரிலீஸை தள்ளி வைத்தனர். அதனால் காலா டீசர் வெளியீட்டையும் தள்ளி வைத்திருந்தனர். தற்போது ‘2.O’ தள்ளிப் போனதால், அந்தப் படம் வெளியாகவிருந்த ஏப்ரல் 27ஆம் தேதி ‘காலா’ படம் திரைக்கு வருகிறது.